நத்தமக்கள்........... கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் வன்னாடு (வந்நாடு) என்பது இன்றைய அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கியிருக்கிறது. பிற்காலச் சோழர் காலத்தில் வன்னாடுடையார்கள் குறுநில மன்னர்களாக இருந்திருக்கிறார்கள். வாலிகண்டபுரம் வாலிஸ்வரர் கோயிலில் வன்னாடுடையார்களைப் பற்றிய பல கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றனர். வன்னாடுடையார்கள் சோழர்களுக்கு உறவினர்களாக விளங்கியுள்ளார்கள். கி.பி. 947 ஆம் ஆண்டைச் சார்ந்த திருவையாறு கல்வெட்டு ஒன்று முதலாம் பராந்தக சோழனின் பட்டத்தரசியாக அரிஞ்சிகை என்பவளை பற்றி குறிப்பிடுகிறது. இவ்வரசி "வன்னாடுடையான் இலாடராயன்" என்பவரது மகளாவர். வன்னாடுடையார்கள் மிலாட்டுடையார்களுடனும் திருமண உறவை கொண்டுள்ளனர். பிற்காலச் சோழர் காலத்தில் குறுநில மன்னர்களாக திகழ்ந்த கிழ் கண்ட வன்னாடுடைய அரசர்களைப் பற்றி தெரியவருகிறது :- "வன்னாடுடையான் தூங்கானை மறவன்" "வன்னாடுடையார் அக்கோ புகழரையர்" "தூங்கானை மறவன்" "வன்னாடுடையான் இலாடராயன்" "வன்னாடுடையான் தூங்கவன் வீரட்டார்" "மறவன் ...
கருத்துகள்
கருத்துரையிடுக